சாலையில் வெள்ளம் போல தேங்கிய மழைநீர்… சாக்கடை கால்வாயில் இறங்கிய காவலர்கள் ; பாராட்டும் பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 9:50 am

கோவையில் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் போல மழை நீர் தேங்கிய நிலையில், காவலர்களின் செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவையில் நேற்று இரவு பெய்த கன மழையால் ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது. அப்போது, பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் முருகசாமி இருவரும் சேர்ந்து ரோட்டில் தேங்கியிருந்த நீரை அகற்றுவதற்கு பெரு முயற்சி செய்தனர்.

பல்வேறு வகையில் நீரை அகற்றுவதற்காக சாக்கடை கால்வாயில் இறங்கி அங்கே இருந்த கழிவுகளை அகற்றி நீர் கால்வாயில் செல்வதற்கு முயற்சி செய்தனர். இதனால் ஓரளவு தேங்கி இருந்த நீர் கால்வாயில் வழிந்து ஓடியது.

https://player.vimeo.com/video/887862926?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஆச்சிரிபடுத்தியது. இருவரது பணியை பெருமளவில் பாராட்டினார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!