காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம்… அது கார்த்தி சிதம்பரத்தின் பேராசை : எம்பி திருநாவுக்கரசர் ஓபன் டாக்..!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 12:41 pm
Quick Share

காங்கிரஸ் மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது அவரது பேராசை என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜோதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி, சிவகங்கை மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர். என்னென்ன பணிகள் மீதம் உள்ளது, கூடுதலாக நிதி எதுவும் தேவைப்படுகிறதா..? என்பது குறித்து எம்பிக்கள் அரசு அதிகாரிகளோடு, கேட்டறிந்து பணிகளை நிறைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது :- மத்திய அரசு யோக்கியமாக இருப்பது போல் அவர்களுக்கு பிடிக்காத அரசாங்களை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு சோதனைகள நடத்தி வந்தனர்.

இன்று மத்திய அரசின் அதிகாரிகளே குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகலே லஞ்சம் வாங்கி இருப்பது அவர்களின் நிர்வாக திறன் இன்மையை காட்டுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் தொடர்ந்து தவறு செய்து வருகிறார். நீதிமன்றத்தில் வாதம் மட்டுமே நடத்து வருகிறது, ஆளுநரிடம் பல்வேறு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும், மோடி மீதான எதிர்ப்பு மக்களிடம் அதிகம் உள்ளது, அது இந்த தேர்தலில் பிரதிபலிக்கும். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், இதில் நான் ஜோசியம் சொல்ல முடியாது.

கார்த்தி சிதம்பரத்தை தலைவராக தலைமை நியமித்தால் அவரும் தலைவராகலாம். யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்பது தலைமை முடிவெடுக்கும். இதில் நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளது அவரது பேராசை. குஷ்பூ விவகாரம் குறித்து நான் ஏதும் சொல்வதற்கு விரும்பவில்லை, எனக் கூறினார்.

Views: - 212

0

0