நிர்பந்தத்தால் தேர்தல் ஆணையர் ராஜினாமா… தேர்தல் முறையாக நடக்குமா..? சந்தேகம் கிளப்பிய காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 1:27 pm
Quick Share

தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்வதற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் முறையாக நடைபெறுமா ?என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழும்பி உள்ளதாக சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு தேர்தல் ஆணையர் திடீர் என ராஜினாமா செய்ய என்ன நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய ராஜினாமா கடிதம் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு, அது ஒப்புதலான வேகத்தை பார்க்கும் போது தேர்தல் முறையாக நடக்குமா..? என்ற சந்தேகம்தான் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசு தன்னுடைய ஏஜென்சியான வருவாய் துறை , புலனாய்வு துறைகள், மூலம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் தேர்தல் நியாயமாக இருக்குமா என்ற சந்தேகமும் மேலோங்கி உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி நன்கொடை தந்தவர்களினன் உடைய புள்ளி விவரங்களை பாஜக கட்சியினுடைய அந்த விவரங்களை பாரத ஸ்டேட் பேங்க் வெளியிட முன்வராதது மிகப்பெரிய ஒரு கேவலமான நிலை அந்த வங்கி மீது ஏற்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் மற்றும் கைது சம்பவத்தில் பார்க்கும்போது, அவசர அவசரமாக தமிழக கவர்னரை பழனிச்சாமி சென்று பார்த்தது எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால் பாஜகவிற்கும், பழனிசாமிக்கும் உள்ள கள்ள உறவு வெளிப்பட்டுள்ளது. வெளியே ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் அந்தரங்கத்திலே பழனிச்சாமி பாஜகவின் நாடகத்தில் ஒரு அங்கமாக இருந்து வருவது போதைப்பொருள் கடத்தல் கைது சம்பவம் தொடர்பாக ஆளுனரை அவர் சந்தித்தது மூலம் வெளிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Views: - 508

0

0