கோவையில் காங்கிரஸ் கவுன்சிலர் ஆற்றில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் தகவல்!

Author: Hariharasudhan
29 November 2024, 9:40 am

கோவை நொய்யல் ஆற்றங்கரையில் காங்கிரஸ் கவுன்சிலர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியின் 56வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று (நவ.28) இரவு பட்டணம் புதூர் அருகே நொய்யல் ஆற்றின் கரையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அப்போது, கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

இவ்வாறு கிருஷ்ணமூர்த்தியின் சடலம் சூலூர் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு காவல் நிலைய எல்லையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜெய்பீம் பட பாணியில் இது குறித்தான வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர், கிருஷ்ணமூர்த்தியின் உடலைக் கைப்பற்றிய சூலூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kovai Congress councilor

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி நொய்யல் பாலத்தின் அருகில் தனது காரை நிறுத்திவிட்டு நடந்து சென்று உள்ளதாகவும், அப்போது கால் வழுக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும், கிருஷ்ணமூர்த்தி மது அருந்தி இருந்ததாகக் கூறும் போலீசார், இந்தச் சம்பவம் நடைபெற்றபோது அவருடன் வேறு யாரும் இருந்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அசைவ சாப்பாட்டுக்கு தடை விதித்த காதலன்.. பெண் பைலட் மர்ம மரணம்!

இதனிடையே, எல்லை பிரச்னையின் இறுதியில், இந்த வழக்கினை சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சூலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • Sivrajkumar health update பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 94

    0

    0

    Leave a Reply