நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மீண்டும் எகிறிய தங்கம் விலை!
Author: Hariharasudhan29 November 2024, 10:09 am
சென்னையில் இன்று (நவ.29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்கள், சுப நிகழ்ச்சிகளுக்கான சிறந்த நேரம் ஆகியவற்றிற்கு இடையே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச வணிகச் சந்தையில் கமாடிட்டியைப் பொறுத்தி தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது.
இதன்படி, இன்று (நவ.29) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம், 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கும்போது அதிகமா சாப்பிடுவீங்களா… அத ஈஸியா கண்ட்ரோல் பண்ண சில வழிகள் இருக்கு!!!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 2 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.