அசைவ சாப்பாட்டுக்கு தடை விதித்த காதலன்.. பெண் பைலட் மர்ம மரணம்!

Author: Hariharasudhan
28 November 2024, 7:59 pm

டெல்லியில் பெண் பைலட் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது காதலன், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்தவர் துலி. இவர், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா பண்டிட் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டெல்லியில் பைலட் பயிற்சியில் ஈடுபட்டபோது காதலிக்கத் தொடங்கி உள்ளனர். பின்னர் இருவரும் அடிக்கடி தனியாகச் சந்தித்தும் வந்துள்ளனர். அந்த வகையில், துலி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்துள்ளர்.

பின்னர், அவரைச் சந்திக்க ஆதித்யா வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதம் அதிகாலை 1 மணி வரை தொடர்ந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, ஆதித்யா டெல்லி செல்வதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இவ்வாறு அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில், துலி அவருக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். உடனடியாக, ஆதித்யா துலி தங்கி இருந்த வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார்.

ஆனால், வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தததால், உடனே தன்னிடம் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு துலி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து, உடனே அவரை மீட்டு அந்தேரி செவன் ஹில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Woman pilot death in delhi

மேலும், பிரேதப் பரிசோதனையில் துலி தற்கொலை செய்திருந்தது தெரிய வந்துள்ளது. இதன்படி, துலியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில், இது குறித்து துலியின் உறவினர் விவேக்குமார் கூறுகையில், “ஆதித்யா துலியிடம் தவறாக நடந்து கொண்டார். துலியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் முயன்றார்.

இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கும்போது அதிகமா சாப்பிடுவீங்களா… அத ஈஸியா கண்ட்ரோல் பண்ண சில வழிகள் இருக்கு!!!

பொது இடத்தில் துலியை ஆதித்யா அவமானப்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக, பார்ட்டி ஒன்றில் துலி அசைவ உணவு சாப்பிட்டதற்காக ஆதித்யா கடுமையாக சத்தம் போட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதன் பிறகு அசைவ உணவு சாப்பிடவும் அவர் அனுமதிக்கவில்லை. மேலும், நடுரோட்டில் துலியின் காரை ஆதித்யா சேதப்படுத்தி உள்ளார். சாப்பாட்டில் அவர் ஏதும் கலந்து கொடுத்திருப்பார்” என்றார்

  • Aadujeevitham Oscar selection மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
  • Views: - 79

    0

    0

    Leave a Reply