மலை அடிவார பகுதியில் சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்…! போலீசார் விசாரணை…

Author: kavin kumar
17 February 2022, 4:38 pm
Quick Share

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குன்னூர் பீட் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து கிருஷ்ணன் கோவில் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்காத வகையில் பத்திரமாக மீட்டு கோவிந்த நல்லூர் குடோன் ஒன்றில் வைத்துள்ளனர்.

மேலும் மலைப் பகுதியில் கைப்பற்றப்பட்ட இந்த நாட்டு வெடிகுண்டுகள் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா அல்லது தேர்தல் சமயத்தில் நாட்டு வெடிகுண்டு கிடைத்திருப்பதால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் வேறு யாரும் வைத்தார்களா என்ற பல்வேறு கோணத்தில் கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்தது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 614

0

0