மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை… வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

Author: kavin kumar
17 February 2022, 4:12 pm
Quick Share

விருதுநகர் : திருச்சுழி அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது, அவர்களிடமிருந்த ஒன்றே கால் (1.250) கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மாங்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக எம்.ரெட்டியபட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் இராமநாதன் தலைமையிலான போலீசார் மாங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாங்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பெண்களை விசாரணை செய்த போது அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மீனாட்சி, தடாகை நாச்சியார், சமுத்திரவள்ளி ஆகிய மூன்று பெண்களை கைது செய்த போலீசார், அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில், விற்பனைக்கு வைகப்பட்டு இருந்த ஒன்றே கால் (1.250) கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த 3 பெண்கள் மீதும் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 669

0

0