பாதியில் வெளியேறிய திமுக மேயர்… வழிமறித்து முற்றுகையிட்ட திமுக கவுன்சிலர்கள் ; கடலூர் மாநகராட்சியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 5:05 pm
Quick Share

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொந்த கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக மேயர் பாதியில் வெளியேறிய நிலையில், கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் கூறிய நிலையில், அடுத்தடுத்து கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

குறிப்பாக, கடலூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக கவுன்சிலர் சரவணன் நீண்ட நேரம் பேசினார். இதனால், அதிருப்தியடைந்த மற்ற கவுன்சிலர்கள் நாங்களும் பேச வேண்டும், ஒருவர் மட்டும் நீண்ட நேரம் பேசினால் எப்படி என கூறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனிடையே, கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததில் இருந்து மாநகராட்சி பகுதியில் கவுன்சிலர்களை யாரும் மதிப்பதில்லை என மேயரிடம் முறையிட்டனர். மேயர் கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாமன்ற கூட்டத்தை விட்டு பாதியிலேயே மேயர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக, பாமக, திமுக கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Views: - 272

0

0