பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்.. பெண் உதவியாளருக்கும் சிக்கல்…!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 11:34 am

தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் முத்தையன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சில்லாரஹள்ளி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

சான்றிதழ்களின் தன்மையைப் பொருத்து லஞ்சப்பணம் குறைவாகவும், அதிகமாகவும் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முதியவர்களிடம் ஒரு மனுதாரரிடம் 5000 வரை கொடுத்தால் மட்டுமே அந்த மனுக்களை பரிந்துரை செய்வதாகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாரிசு மற்றும் ஆதரவற்ற விதவை சான்றிதழ் சுமார் 50,000 ரூபாய் வரையிலும், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு 10 ஆயிரம் வரையிலும் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கேட்கும் படி லஞ்சப் பணம் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வேலை செய்து கொடுக்காமல் நீண்ட நாட்களாக அலை கழிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, கிராம நிர்வாக அலுவலர் இலஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை நடத்த அரூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கோட்டாட்சியர் முத்தையன் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானது.

இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் முத்தையன் உத்தரவிட்டார். மேலும், உதவியாளர் ஜெயந்தி பணியிடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில்லாரஹள்ளி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!