ஆல்யா மானசாவுக்கு வாழ்த்து கூறிய சஞ்சீவ்- எதுக்குன்னு தெரியுமா.. கியூட்டான வீடியோ வைரல்.!

Author: Rajesh
28 May 2022, 11:41 am
Quick Share

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அண்மையில் தான் மகன் பிறந்தார், பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார்.

அடுத்து எந்த தொடர் நடிப்பார் என தெரியவில்லை, ஆனால் சஞ்சீவ் தற்போது சன் தொலைக்காட்சியில் கயல் தொடரில் முக்கிய நடிகராக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று, நடிகை ஆல்யா மானசாவிற்கு பிறந்தநாள், அதோடு இருவரின் திருமண நாள் இன்று தான். எனவே அவர்கள் சுற்றுலா சென்று தங்களது சந்தோஷமான நாளை கொண்டாடி வருகிறார்கள்.

சஞ்சீவ் தனது மனைவிக்கு கியூட்டாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து கூறும் வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 421

0

0