குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி அடம்பிடித்த தம்பதி… டுவிஸ்ட் வைத்த அமைச்சர் உதயநிதி; பிரச்சாரத்தில் கலகல!!

Author: Babu Lakshmanan
9 April 2024, 1:56 pm
Quick Share

தருமபுரி அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது, குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லிக் கேட்ட தம்பதியினர், பெற்றோருக்கே அமைச்சர் உதயநிதி டுவிஸ்ட் வைத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கலகலப்பாக்கியது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் இண்டியா கூட்டணியில் திமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: இப்போ 400+.. மே இறுதியில் 250 ஆக குறையும்.. பாஜகவுக்கு ட்விஸ்ட் வைத்த முன்னாள் தேர்தல் ஆணையர்!

அப்போது, தருமபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி 108 ஆம்புலன்ஸ் வருவதை அறிந்த உதயநிதி ஸ்டாலின், தனது உரையை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விடுங்கள் என பொதுமக்களிடத்தில் கூறி ஆம்புலன்ஸ் செல்லும் வரை தனது பிரச்சாரத்தை சற்று நேரம் நிறுத்தி வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பேச ஆரம்பித்தபோது பிரச்சாரத்திற்கு வந்திருந்த ஒரு தம்பதியினர், தங்கள் ஆண் குழந்தைக்கு ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டும் என குழந்தையை தூக்கி அவரிடத்தில் கொடுக்க முயன்றனர். அப்போது, உடனே அவர் குழந்தைக்கு எத்தனை வயது ஆகிறது? என கேட்க, குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது என பெற்றோர்கள் கூறினர்.

மேலும் படிக்க: PAY’TM’ போல PAY’PM’… ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக ; அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்!!

“இரண்டு வயது ஆகியும் இன்னும் குழந்தைக்கு பெயர் வைக்கவில்லையா?, உண்மையை சொல்லுங்க. என்ன பெயர் வைத்து உள்ளீர்கள்..?,” எனக் கேட்டார். உடனே அந்த தம்பதி, குழந்தைக்கு ரோலக்ஸ் என பெயர் வைத்துள்ளோம் என்று கூறினர்.

இதனைக் கேட்ட அமைச்சர் உதயநிதி, இதுவே நல்ல பெயர் தானே, இதுவே இவனது பெயராக இனி இருக்கட்டும் என கலகலப்பாக பேசினார். பின்னர், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிறகு அங்கிருந்து பறப்பட்டு சென்றார்.

Views: - 249

0

0