கழிவறையில் கட்டு கட்டாக பணம்… பணப்பட்டுவாடா செய்ததா பாஜக? கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 1:18 pm

கழிவறையில் கட்டு கட்டாக பணம்… பணப்பட்டுவாடா செய்ததா பாஜக? கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள ஐஜேகே கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் வீட்டின் கழிவறையில் ரூ ஒரு லட்சம் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான புத்தக கையேடு ஐஜேகே கட்சியின் நிறுவனர் தொகுதிக்கு செய்த விளக்க புத்தக கையேடு உள்ளிட்டவைகளை லால்குடி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தரும் ஐஜேகே கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!