தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 10:07 pm
CM stalin
Quick Share

தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு!

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேரிகத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர். முதலமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார்.

ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1, ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1, தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1, ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1, கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1. பழனிசாமி அவர்களே இதெல்லாமே நாங்கள் சொன்னவை அல்ல, ஒன்றிய அரசின் புள்ளி விபரங்கள்.

அதிமுக ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, திமுக ஆட்சியமைந்ததும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம்.

“நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும் பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம்.

மேலும் படிக்க: அதிமுகவுக்கு ஓட்டு போடுறது வேஸ்டா? நாங்க ஓட்டுபோட்டுதான் அன்புமணி MP ஆனாரு: இபிஎஸ் விமர்சனம்!

அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம்தேதி 40-க்கு 40 என்ற விருது கிடைக்கும் பழனிசாமி அவர்களே Wait and See..!” எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்.

சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது. இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

Views: - 135

0

0