வாக்கு சேகரிக்க வரவில்லை… உங்கள் ஆசி வாங்கவே வந்தேன் : முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 1:49 pm
df
Quick Share

வாக்கு சேகரிக்க வரவில்லை… உங்கள் ஆசி வாங்கவே வந்தேன் : முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!

கோவை, கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை அங்கு உள்ள நானா நானி முதியோர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றார்.

அப்போது அவர்களுடைய பேசி அண்ணாமலை தன்னையும் அறியாமல் கண் கலங்கினார் அங்கு இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

முன்னதாக மாலை அணிவித்தும் பூரண கும்ப மரியாதை வழங்கி சிறப்பான வரவேற்பு வழங்கினர். பின்னர் அங்கிருந்த முதியோர்களிடம் பேசி அண்ணாமலை தான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை எனவும் தங்களிடம் ஆசி பெற வந்து உள்ளேன் எனவும் கூறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார்.

மேலும் படிக்க: ராமர் கோவிலில் அபூர்வ நிகழ்வு… ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி..புல்லரிக்க வைக்கும் VIDEO!!

அவரது தலையில் கை வைத்து அனைவரும் ஆசிர்வாதம் வழங்கி மலர்கள் தூவினர் இங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாளர்களிடையே அண்ணாமலை கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 122

0

0