விரைவில் நடிகர் ரஜினிக்கு நிரந்தர கோவில்… தற்காலிக கோவில் அமைத்து வழிபாடு நடத்தி வரும் ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் உறுதி

Author: Babu Lakshmanan
13 December 2023, 11:55 am

ரஜினியின் 73வது பிறந்த நாளை ஒட்டி, திருமங்கலத்தில் நடிகர் ரஜினியின் சிலைக்கு அவரது ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ரஜினி ரசிகரான திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் 50 வயது கொண்டவர் கார்த்திக். கடந்த மூன்று ஆண்டு காலமாகவே, வாடகைக் கட்டிடமான தொழில் நிறுவனத்தில் தனியாக ஒரு அறை எடுத்து, அதில் ரஜினியின் பல்வேறு படங்களில் உள்ள உருவங்களை போஸ்டராக ஒட்டியுள்ளார்.

மேலும், ரஜினி கோவில் என பெயரிட்டு ரஜினியின் படத்திற்கு நாள்தோறும் ஆறு வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் செய்து வழிபட்டு வருகிறார் கார்த்திக்.

தனது குடும்பத்தினருடன் நேற்று அவருடைய 73வது பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லாலான மூன்றடி உயர ரஜினியின் சிலைக்கு, கடவுள் போன்ற திருவாச்சி அமைத்து மின்விளக்குகளால் அலங்கரித்தும், ரஜினியுடைய சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டார்.

மேலும், ரஜினி பல்லாண்டு நீடூடி வாழவும், தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்து கொண்டனர். விரைவில் ரஜினிக்காக சொந்த இடம் வாங்கி, அதில் கட்டிடம் கட்டி ரஜினி கோவில் என பெயரிட்டு வழிபட உள்ளதாகவும், திட்டம் திட்டி உள்ளதாக கார்த்திக் தெரிவித்தார். ரஜினியின் பிறந்த தினமான நேற்று , பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு அன்னதானமும் வழங்கி மகிழ்ந்தார்,

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!