பல பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள்… கணவனின் மன்மத லீலைகள் ; ஆதாரத்துடன் டிஐஜி அலுவலகம் சென்ற மனைவி!

Author: Babu Lakshmanan
13 December 2023, 11:34 am
Quick Share

பல பெண்களுடன் தனிமையில் இருந்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து மிரட்டுவதாக தன் கணவன் மீது தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஒரு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (30) என்பவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் குடும்பத்துடன் சென்று மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எனக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த 36 வயது நபருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
என் கணவர் தஞ்சையில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து சென்னையில் உள்ள எனது கணவர் அக்கா வீட்டிற்கு சென்று ரயிலில் திரும்பினோம். அப்போது, அவரது செல்போனில் இருந்து போட்டோ அனுப்ப முயன்ற பொழுது, பல பெண்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம், நிர்வாணமான பல பெண்களுடன் பேசிய படங்களின் போட்டோ மற்றும் ஆபாச போட்டோக்கள் இருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது யாரிடம் கூறக்கூடாது. மீறினால் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதேபோல் அவரது பெற்றோரும் என்னை அச்சுறுத்தினர். மேலும், அவர் எனது கழுத்தை நெரித்து என்னை மிதித்ததால் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இது தவிர என் கணவருக்கு இதற்கு முன்பே வேறு திருமணம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய சட்டப் பிரிவின் கீழ் என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 461

    0

    0