சும்மா பெருமை பேசாதீங்க… இப்ப தெய்வக்குற்றம் ஆயிடுச்சு ; இந்து அறநிலையத்துறையை வெளுத்து வாங்கிய பிரேமலதா..!!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 5:10 pm
Quick Share

இந்த அறநிலையத் துறையைச்‌ சார்ந்த அதிகாரிகள்‌ மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால்‌ தான்‌, இனிவரும்‌ காலங்களில்‌ தேர்‌ விழாக்களில்‌ ஏற்படும்‌ விபத்துக்களை தடுக்க முடியும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்‌ சித்திரை மாதம்‌ என்றாலே கோவில்‌ விழாக்கள்‌, தேர்‌ திருவிழாக்கள்‌ நடப்பது வழக்கம்‌, கோவில்‌ மாநகரம்‌ என்று அழைக்கப்படும்‌ தஞ்சாவூர்‌ மற்றும்‌ கும்பகோணம்‌ தேர்‌ திருவிழாக்களில்‌ அரசு அதிகாரிகளின்‌ கவனக்குறைவின்‌ காரணமாக,
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்,‌ தஞ்சாவூர்‌ மற்றும்‌ கும்பகோணம்‌ தேர்‌ திருவிழாக்களில்‌ தேர்‌ மின்‌ கம்பங்களில்‌ சிக்கிக்கொள்வதும்‌, சாலைகள்‌ சீரமைக்காததால்‌ குளறுபடி ஏற்பட்டு பள்ளத்தில்‌ சிக்கியதாலும்‌ மிகப்பெரிய இடையூறையும்‌, வேதனையையும்‌ மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க: கழுகை விரட்ட அண்ணன் வைத்த குறி.. குறுக்கே வந்த மகன் ; ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தங்கை.. 2 பேர் கைது!!!

இத்துறையைச்‌ சார்ந்த அதிகாரிகள்‌ மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால்‌ தான்‌, இனிவரும்‌ காலங்களில்‌ தேர்‌ விழாக்களில்‌ ஏற்படும்‌ விபத்துக்களை தடுக்க முடியும்‌. தஞ்சை மாநகர்‌ என்றாலே கோவில்‌ பிரசித்தி பெற்ற தளங்களாகும்‌. இதுபோன்ற குளறுபடி நிகழ்வுகள்‌ மக்களுக்கு இந்த ஆண்டு முழுவதும்‌ அச்சத்தையும்‌, பயத்தையும்‌, மனவலியையும்‌ ஏற்படுத்தி, தெய்வக்குற்றமாக பார்த்து உணர்வுபூர்வமான எண்ணத்தை கொடுத்து விடுகிறது.

இந்த ஆட்சியில்‌ பல குடமுழுக்குகள்‌, கோவில்‌ திருவிழாக்கள்‌ நடந்ததாக பெருமை பேசிக்கொள்ளும்‌ அறநிலையத்துறை, ஏன்‌ இதுபோன்ற விழாக்களில்‌ முன்கூட்டியே கவனம்‌ செலுத்துவதில்லை என்று மக்கள்‌ கேள்வி எழுப்புகிறார்கள்‌. தமிழக மக்கள்‌ பாரம்பரியமும்‌, கலாச்சாரத்தையும்‌ பின்பற்றுவர்கள்‌. எனவே இனிமேல்‌ தமிழக அரசு இதுபோன்ற கோவில்‌ தேர்‌ திருவிழாவில்‌ அசம்பாவிதம்‌ நடக்காத வண்ணம்‌ செயல்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 105

0

0

Leave a Reply