‘பாரத் மாதா கி ஜே’ என கோஷம்… காரை மடக்கிப் பிடித்து தாக்கிய திமுக தொண்டர்கள்… ஆர்எஸ் பாரதி கூட்டத்தில் சலசலப்பு…!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 7:24 pm

தென்காசி ; திமுகவை சேர்ந்த ஆர்எஸ் பாரதி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அருகே பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு காரில் சென்றவர்களை திமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தில் பேசினார்.

பொதுக்கூட்டம் முடித்த பிறகு ஆர்எஸ் பாரதி காரில் ஏறி புறப்பட்டபோது, நெல்லை – தென்காசி சாலையில் வெள்ளை நிற காரில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் குற்றால அருவியில் குளிப்பதற்காக செல்லும் பொழுது, சாலையோரம் திமுகவின் கொடிகள் மற்றும் கூட்டத்தை கண்டதும் திமுகவினரை கிண்டல் செய்ததாகவும், பாரத் மாதா கி ஜெய் என கோசம் இட்டவாறு காரில் சென்றனர்.

அப்பொழுது சாலையில் கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த திமுகவினர், பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு சென்ற காரை மறித்து கேட்டுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட திமுகவினர் சுற்றி வளைத்து காரை தாக்கினர்.

பின்னர், காருக்குள் இருந்த நபர்களையும் அவர்கள் தாக்கினர். இதனால், சிறு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் இரு தரப்பையும் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?