‘யாரு சுட்ட வடை.. இது மோடி சுட்ட வடை..’ பாஜகவை விமர்சித்து பொதுமக்களுக்கு வடை விநியோகித்த அமைச்சர் மா.சு..!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 1:38 pm

பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக, ‘யாரு சுட்ட வடை.. இது மோடி சுட்ட வடை.. என்று பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வடையை விநியோகம் செய்தார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ கருவிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து, கொரடாச்சேரி பகுதியில் 1955இல் பாரத பிரதமர் நேரு திறந்து வைத்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்ட நிலையில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கொடாச்சேரி வெட்டாற்று பாலம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது மோடி சுட்ட வடை என்கிற துண்டு பிரசுரங்கள் மற்றும் வடையை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!