சுவர் ஏறி குதித்து குழந்தையை கடத்த முயற்சி… வடமாநில வாலிபருக்கு தர்ம அடி : இணையத்தில் வைரலான தகவல் உண்மையா?

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 1:24 pm
Kidnap attempt
Quick Share

சுவர் ஏறி குதித்து குழந்தையை கடத்த முயற்சி… வடமாநில வாலிபருக்கு தர்ம அடி : இணையத்தில் வைரலான தகவல் உண்மையா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை, அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தியானது என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சாலையோரமாக சுற்றித்திரிந்துள்ளார். மேலும் அவர் அங்கு நின்றுகொண்டிருந்த 3 வயதுடைய குழந்தையை அழைத்துள்ளார்.

இதைப்பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கவே அவர் தமிழ் மொழியில் பேசாமல் வேறு மொழிகளில் ஏதேதோ பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த வாலிபர் வடமாநில வாலிபராக இருக்கலாம் என்றும், குழந்தையை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்று கருதியும் அந்த வாலிபரை பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதில் அவர் காயமடைந்தார். உடனே இதுகுறித்து பொதுமக்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த நபரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதே நபர் இன்று காலையில் விழுப்புரம் அருகே அய்யன்கோவில்பட்டு பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள், அவரை அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இந்த சூழலில்தான் விழுப்புரத்தில் குழந்தையை கடத்த முயற்சி செய்ததாக கருதி பொதுமக்கள் தாக்கியுள்ளனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அவர் உண்மையிலேயே குழந்தையை கடத்த முயற்சி செய்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 189

0

0