எதிர்க்கட்சிகளுடன் கைக்கோர்த்த திமுக கவுன்சிலர்கள் : திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 6:03 pm
Dmk Councilors Against - Updatenews360
Quick Share

நகராட்சிக்கு சொந்தமான பழைய தினசரி மார்கெட் கட்டிட இடுப்பாடு பொருட்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவரை எதிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதிமுக, திமுக, பாமக, பிஜேபி உள்ள கட்சிகளை சார்ந்தவர்கள் நகர் மன்ற உறுப்பினர்களாக உள்ளனர்

இதில் திமுகவை சேர்ந்த ஜானகி ராமசாமி என்பவர் தலைவராக உள்ளார். தற்பொழுது சத்தியமங்கலம் நகராட்சியில் சந்தை கடை என்ற இடத்தில் ஏற்கனவே இருந்த காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு முன்பு இருந்த தினசரி மார்கெட் உள்ளே இருந்த 100 ஆண்டு பழமையான விலை உயர்ந்த மரங்கள், பழைய கட்டிட மேற்கூரை பயன்பாட்டில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், இரும்பு பட்டா, மற்றும் இரும்பு குழாய்கள் இவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்திற்க்கும் அதிகமானதாகும்.

ஆனால் முறையாக நகர்மன்ற கூட்ட தீர்மானம் கொண்டு வராமல், எந்த நகர்மன்ற உறுப்பினர்களும் தெரியாமல் நகராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த விலைக்கே ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் வெளிப்படை தன்மை இல்லாமல் நகராட்சி தலைவருக்கு வேண்டிய ஒப்பந்ததாரர் மிக குறைந்த விலையில் விலைக்கு எடுத்து இதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டி இன்று நகராட்சி அதிகாரிகளை எதிர்த்து திமுக, பாமக, அதிமுக, பிஜேபி உள்ளிட்ட கவுன்சிலர்கள் 20க்கும் மேற்பட்டோர் நகராட்சி மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் நகராட்சி தலைவர் உறுப்பினர்களின் எந்த ஒரு அனுமதி பெறாமல் பல்வேறு டெண்டர்கள் மூலம் முறைகேடுகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகின்றனர்

இதில் குறிப்பாக திமுக கவுன்சிலர்கள் திமுக தலைவரையே குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 469

0

0