மூட்டை மூட்டையாக குட்கா கடத்தல்… திமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது ; உடனே கட்சி தலைமையில் இருந்து வந்த அறிவிப்பு

Author: Babu Lakshmanan
27 April 2024, 2:05 pm

தென்காசி – சிவகிரியில் 600 கிலோ குட்கா பொருளை கடத்திய திமுக ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தென்காசியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீஸ் கைது செய்தனர்.

மேலும் படிக்க: சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!

மாவட்ட எல்லையான சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் வந்த காரை மடக்கி நடத்தப்பட்ட பரிசோதனையில், 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவரான திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் சந்திர போஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்திர போஸ் மற்றும் கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், குட்கா போதைப்பொருளை கடத்திய திமுக நிர்வாகி சந்திர போஸை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

  • Priyanka Deshpande cried Vijay TV Fame Shared கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!