மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் : குளிப்பதை வீடியோ எடுத்த விஏஓ… ஷாக் சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 8:22 pm
dmk
Quick Share

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் : குளிப்பதை வீடியோ எடுத்த விஏஓ… ஷாக் சம்பவம்!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டம், உருளைகுடி பஞ்சாயத்து பீக்கிலிபட்டி தெற்கு தெருவை சார்ந்த பாலகிருஷ்ணன் மகள் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தான் பீக்கிலிபட்டி கிராமத்தில் வசித்து வருவதாகவும் தனக்கு வயது 33 ஆகின்றது என்றும், தான் பிறவியிலிருந்து உடல் ஊனமுற்றோர் என்பதால் அரசு கொடுக்கும் பணத்தை வைத்து அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வரும் நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலரான ஜெயராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து தான் குளிக்கும் போது ஆபாசமாக போட்டோ எடுத்தனர்.

இதுகுறித்து ஏன் எடுக்கிறீர்கள் என கேட்டபோது எனது அப்பா அம்மாவிடம் அவர்கள் சண்டை போட்டனர். இதுகுறித்து கடந்த 28-8-2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தேன்.

அந்த புகார் மனு அளித்த பின்பு விஏஓ ஜெயராஜ், மற்றும் ராஜ்குமார் இருவரும் சேர்ந்து அவர்களின் தூண்டுதலின் பெயரில் உருளைக்குடி பஞ்சாயத்து தலைவர் மற்றும் திமுக கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் என்னிடம் பலமுறை வந்து இந்த இடத்தை காலி பண்ண வேண்டும் என்றும் இல்லை என்றால் ஜேசிபி -யைக் கொண்டு குளியலறையை இடித்து விடுவேன் என்று என்னை மிரட்டி வருகின்றனர்.

இல்லையென்றால் உன் காலை உடைத்து விடுவேன் எனக்கூறி கொலை மிரட்டலும் விடுக்கின்றார். எனவே மாவட்ட ஆட்சியர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடல் ஊனமுற்றோர் என பார்க்காமல் என்னிடம் கொலை மிரட்டல் விடும் பீக்கிலிபட்டி முருகேசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்ததாக அவர் தெரிவித்தார்.

Views: - 90

0

0