அமைச்சரின் காலணியை எடுத்து தந்த பழனி எம்எல்ஏ.. தட்டிக்கொடுத்த அமைச்சர் கேஎன் நேரு ; அரசு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 5:48 pm
Quick Share

அமைச்சர் நேருவின் காலணியை பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கையில் எடுத்து கொடுத்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக திண்டுக்கல்லில் ரூ.132.52 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி எம்.வி.எம். நகரில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட வளாகத்தில் நடைபெற்றது. திட்ட துவக்கவிழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்திருந்தார்.

அங்கு நடைபெற்ற பூமிபூஜையின் போது தனது காலணிகளை கழட்டி விட்டு பூமி பூஜையில் கலந்து கொண்டார். பூஜை முடிந்ததும் அங்கு வந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அமைச்சர கே.என்.நேருவின் காலணியை தேடி எடுத்து தந்து தனது விசுவாசத்தை காட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் நேரு பரவாயில்லை என்பது போல எம்எல்ஏ செந்தில்குமாரை தட்டிக்கொடுத்தார்.

இது அமைச்சருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே அப்படியொரு நெருக்கம் இருந்தாலும், அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற நிகழ்வு கூடாது என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 119

0

0