பயப்படுகிறார் பிரதமர் மோடி… அடுத்து திமுகவின் இலக்கே அதுதான்… அடித்து சொல்லும் திமுக எம்பி கனிமொழி..!!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 9:35 am
Quick Share

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது மக்களிடம் கருத்து கேட்டு, தெளிவான விளக்கம் கொடுத்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காக பார்வதி சண்முக சாமி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்திற்கு வருகை தந்தார். அப்போது, தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், கூட்டணிக்கும் அவருடைய ஆதரவை தெரிவித்தார்.

பின்னர், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி. மு. க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? பாஜக ஆட்சியின் போது இது போன்று தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. அவர்களோடு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இன்கம்டேக்ஸ், சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்து அவர்கள் மீது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவில் இணையாததால் பாஜக வாஷிங் மெஷின் போன்று சுத்தமாக கழுவி துடைத்து வெளியே எடுத்து விடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கின்ற நிதர்சனம், தொடர்ந்து தமிழகம் வருகின்றார் மோடி என்று சொல்லும் போது, அவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.

சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் பாதிப்பு, அதே போல தூத்துக்குடி, திருநெல்வேலி எல்லாம் இதுவரை நாம் சந்தித்ததே இல்லாத பாதிப்பு, மக்கள் அவ்வளவு அவதிக்கு உள்ளானார்கள். வீடு இழந்தார்கள், ஆடு, மாடுகள் எல்லாமே வெள்ளத்தில் அடித்து போக கூடிய சூழலை நாம் சந்தித்தோம். அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர் தேர்தல் நேரம் வந்தவுடன் அடிக்கடி வருகிறார்.

தூத்துக்குடியை பொருத்தவரை சமீபத்தில் தான் முதலமைச்சர் கிட்டத்தட்ட 16,000 கோடிக்கு வின்ஸ்பாட் நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்கள். இன்னும் பல தொழில் முதலீடுகள் தூத்துக்குடிக்கு வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றோம். விரைவில் புதிய தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவார்கள். இங்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அடுத்து மையமாக நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஒன்றாக இருக்கும்.

மத்திய அரசிடம் வைக்கக்கூடிய சில கோரிக்கைகள் இங்கு இருக்கக்கூடிய ரயில்வே தேவைகள் இதையெல்லாம் அவர்கள் பலமுறை கேட்டால்தான் நிறைவேற்றி தரக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி 10 ஆண்டுகாலம் கடந்து இருந்தால் கூட குலசேகரன்பட்டினம் ஒரு ராக்கெட் ஏவுதளம் எங்களால் கொண்டு வர முடிந்து இருக்கிறது. அது எங்களுக்கு ஒரு வெற்றி தான், அப்போது இருந்த மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதினார்.

அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இதைப் பற்றி கேள்விகளை எழுப்பி இருக்கின்றேன். முதலமைச்சர் இதை வலியுறுத்தி இருக்கின்றார்கள். அது மட்டுமில்லாமல் இஸ்ரோவில் வேலை செய்யக்கூடிய விஞ்ஞானிகள் முக்கியமான பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களை சந்தித்து கோரிக்கைகளை தொடர்ந்து வைத்திருந்தேன்.

தூத்துக்குடியில், இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்குவதாக இருந்தது. அதை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை. தற்போது இருக்கக்கூடிய அமைச்சர் ஒன்றிய அரசின் அமைச்சர்களிடம் தெரிவித்து, மறுபடியும் அந்த பணிகளை டெண்டர் விட்டு பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட பாதி வேலை கட்டிட வேலை முடிவடைய கூடிய நிலையில் உள்ளது. டைட்டில் பார்க் தூத்துக்குடியில் கட்டிக் கொண்டிருக்கின்றோம். மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பொழுது மக்களிடம் கருத்து கேட்டு, தெளிவான விளக்கம் கொடுத்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்படும், என்றார்.

Views: - 107

0

0