தீக்குளிக்க முயன்ற திமுக பெண் கவுன்சிலர் : குழந்தைகள், குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 2:22 pm

குழந்தைகள், குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே நேற்று முன்தினம் பொம்மையார்பாளையத்தில் விமல்ராஜ் என்பவர் மர்ம நபர்களால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்த ஆறு பேரில் கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் துர்கா தேவியின் கணவர் கலைஞர் என்பவரை திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து அவர் உட்பட 5 பேரை மொத்தம் கோட்டகுப்பம் போலீசார் கைது செய்துள்ளனர். இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் துர்கா தேவி அவரது மகன் உறவினர் நாகராஜ் ரேணுகாதேவி தேவி சந்திரன், கணேஷ் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் இன்று தனது கணவர் கலைஞர் என்ற நாகராஜன் கொலை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி குடும்பத்துடன் 10 பேர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் உடன் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

ஆளுக்கு ஒரு புறம் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி செய்த பொழுது யாரையும் தடுக்க முடியாமல் அங்கு பணியில் இருந்த போலீசார் பெரிய போராட்டத்திற்குப் பின்பு அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் இது குறித்து உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். குழந்தைகளுடன் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!