கவுன்சிலரிடம் அநாகரிகமா பேசாதீங்க : கொந்தளித்த பெண் உறுப்பினர்… கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிகாரிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 1:41 pm
Councilor - Updatenews360
Quick Share

கவுன்சிலரிடம் அநாகரிகமா பேசாதீங்க : கொந்தளித்த பெண் உறுப்பினர்… கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிகாரிகள்!

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசர நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் உஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியவுடன் சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா நேற்று முன் தினம் காலமானார்.

இக்கூட்டத்தில் சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து கூட்டம் தொடங்கிவுடன் நகராட்சி 15 வது வார்டு உறுப்பினர் நித்யா,நான் ஒரு பெண் கவுன்சிலர். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.

நகராட்சி கமிஷனர் என்னிடம் மரியாதை குறைவாக பேசுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக நான் எனது வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆணையாளரிடம் தொலைபேசி வாயிலாக பேசும் போது அவர் அநாகரிகமாக பேசியதுடன் கோபமாக செல்போன் இணைப்பை துண்டித்தார்.

இதுதான் நாகரீகமா, மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து மன்றத்தில் இருந்த மற்ற தி.மு.க., அதி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கவுன்சிலர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோபமடைந்த ஆணையாளர் மனோகரன், “நான் பேசியது தவறு என்று நீங்கள், நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன்,” என சொல்லிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கமிஷனர் மனோகரன் உடன் அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.

Views: - 209

0

0