விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் : நெல்லை மாவட்ட காவல்துறையில் களையெடுப்பு.. தமிழக அரசு உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 9:41 pm

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜனும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?