காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ இயக்கிய பேருந்து விபத்து… ஆரம்பமே இப்படியா : உயிர்தப்பிய பொதுமக்கள்…!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 8:49 am
MLA Bus Accident - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் வேகவதி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கென 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீட்டினர் குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இக்குடியிருப்பு வாசிகள் அடிப்படை தேவைகள் எதுவுமின்றி வசித்து வருவதாகவும், குறிப்பாக போக்குவரத்து வசதியின்றி பள்ளி & கல்லூரி மாணவர்கள் தவித்து வருவதாகவும் இதனால் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் அக்குடியிருப்பு வாசிகளுக்கென பேருந்து சேவையினை துவங்கி வைக்க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி.எழிலரசன் வந்திருந்தார்.

அப்போது பேருந்து சேவையை தொடக்கி வைக்க பேருந்தில் ஏறி காஞ்சிபுரம் எம்.பி.செல்வம் உட்பட்ட கட்சியினர்,பொதுமக்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோரை அமர வைத்தப்படி பேருந்து ஓட்டுவது போல் போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஏறி அமர்ந்தபடி காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசன் பேருந்தினை ஓட்ட முற்பட்ட போது அங்கு குறுகிய வழியில் சற்று தூரம் சென்ற பேருந்து பக்கவாட்டிலிருந்த கால்வாய் ஒன்றில் இறங்கியது விபத்துக்குள்ளானது.

அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து செல்லக்கூடிய STAY ஒயரின் மீது விபத்துக்குள்ளான பேருந்து சாய்ந்தபடி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கட்சியினர்,பொதுமக்கள் என அனைவரும் பேருந்திலிருந்து உடனடியாக வெளியேறி நிம்மதி பெருமூச்சி விட்டனர்.பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

மூதாட்டி ஒருவர் அய்யய்யோ ஆரம்பமே இப்படியா என்ன புலம்பிக்கொண்டே சென்றார். இதனையெடுத்து கட்சியினர் உதவியோடு எம்எல்ஏ வை மீட்டனர்.

பின்னர் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் பள்ளத்தில் இறங்கிய பேருந்தை ஐலேசா பாட்டு பாடி மீட்டனர். இந்த விபத்தினால் அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் ஒரு பகுதியானது சேதமாகியது. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் புலம்பிக்கொண்டே பேருந்தை ஓட்டி சென்றனர்.

வாழைக்கன்று,மாவிலை தோரணம்,மாலை அணிவித்து அலங்காரமாய் பேருந்து சேவையை தொடர வந்த, “அரசு பேருந்து அலங்கோலமாய்” சென்றது.

பேருந்து சேவை தொடக்க நாளே விபத்தில் சிக்கி பொது மக்கள் உயிர் தப்பியதும், போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக எம்எல்ஏ போக்குகாட்டி பொதுமக்கள் உயிரை பணையம் வைத்து பொறுப்பின்றி செயல்பட்டதும் விடியா திமுக ஆட்சியின் தான்தோன்றித்தனத்தை தோலுரித்து காட்டியது.

Views: - 438

0

0