கேஸ் கசிவு காரணமாக காரில் இருந்த சிலிண்டர் வெடித்து கோர விபத்து : ஒருவர் உடல் கருகி பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 10:39 am
Car Dead - Updatenews360
Quick Share

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியிடல் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Views: - 308

0

0