தமிழக அரசு மக்கள் கோபத்திற்கு ஆளாவது உறுதி ; ஆளுநருக்கு KEY கொடுக்கும் மத்திய அரசு ; துரை வைகோ

Author: Babu Lakshmanan
25 December 2023, 9:01 pm
Durai Vaiko - Updatenews360
Quick Share

மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை கொடுக்க மறுத்து தேசிய பேரிடர் ஆக அறிவிக்கு மறுப்பதாக மதிமுகவின் துரை.வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சிக்கு திராவிட முன்னேற்ற கழகத்தில் திருச்சி மாநகர் மாவட்டம், வடக்கு, மற்றும் தெற்கு மாவட்டத்தின் நாடாளுமன்ற தேர்தல் கலந்தாய்வு கூட்டம் துரை.வைகோ தலைமையில் திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- மதிமுக பலம் என்னவென்று சொன்னால் அது தொண்டர்கள் மற்றும் கொள்கை உறுதி தான். வைகோ மற்றும் காட்சியின் மூத்த முன்னோடிகள் கலந்து பேசி தொகுதியை குறித்து முடிவு செய்வார்கள். கூட்டணி தலைமை முடிவு என்ன எடுக்கிறது. அதன்படி கூட்டணிக்கான இடங்கள் ஒதுக்கீடு சொல்ல முடியும்.

திருச்சியை பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கான தொகுதி மதிமுகவிற்கு வேண்டும் என விரும்புகின்றனர். ஏற்கனவே திருச்சியில் நின்று மதிமுக கட்சியினர் வென்றுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர் தான் முடிவு செய்வார். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிதி உள்ளது. 75% ஒன்றிய அரசு நீதி 25மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் அப்படி தான் 1500 கோடி ஒதுக்க வேண்டும்.

சென்னை காஜா, மிக்ஜாம் புயலில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் எல்லாத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 19ஆயிரம் கோடி தேவை என தெரிவித்துள்ளனர். அண்ணாமலை ஏற்கனவே கொடுத்த நிதியில் 80 கோடி ரூபாய் செலவு செய்யாமல் மீதி இருக்கிறது மேலும் 450 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது நானும் 450 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் என்ணை கழிவினால் 22 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. படகுகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு பனிரெண்டாயிரம் ஒரு படகிற்கு தருவதாக கூறியது. ஆனால் அந்தத் தொகை போதாது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பதிக்கப்பட்டிருக்கிறதே. தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் அதிக அளவில் நிதி தேவை.

தமிழக முதல்வரும், தமிழக அரசும் தேசிய பேரிடராக அறிவித்து அதிக அளவில் நிதி வழங்க வேண்டும் வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கிறது. நிதியும் தர மறுத்து அதிக அளவில் தருவதாக கூறி வருகிறது. 2015 இருந்து தொடங்கி கஜா, ஒக்கி புயல் நடந்த கடந்த அதிமுக ஆட்சிக்கு உட்பட்டு கேட்கப்பட்ட நிதி ஒரு லட்சத்து 27ஆயிரம் கோடி கேட்கப்பட்டுள்ளது ஆனால் 5ஆயிரத்து 27 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

கவர்னரின் போக்கினால் 2020-21 லிருந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ரொபஷனல் சர்டிபிகேட் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலை கிடைத்தால் ஒரிஜினல் சர்டிபிகேட் மட்டுமே வழங்க வேண்டும். இல்லை என்றால் வேலை பறிபோய்விடும். பலருக்கு ஏற்கனவே இது போல் வேலை பறிப்பை உள்ளது. ஒன்றிய அரசு கவர்னர் எப்போ, எப்படி செயல்பட வேண்டும் எப்படி அரசுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது.

நிவாரணம் கொடுக்கவில்லை என்றால் தமிழக அரசு மீது தான் மக்களுக்கு கோபம் ஏற்படும் அதை தான் இந்த மத்திய அரசு செய்கிறது. தமிழகத்தில் 1000 கோடி வரி வசூல் செய்தால் நமக்கு கிடைப்பது 250கோடி தான். இது உதாரணம் மத்திய பிரதேசக்கோ, உத்திரபிரதேசம் ஆயிரம் கோடி வசூல் செய்தால் 2000 கோடி வழங்குகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு, அண்ணாமலையின் போக்கினால் எப்படி தமிழக முன்னேறும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்திற்கு சென்றதற்கு பாஜக அரசு பொறுப்பு தான்.

தமிழகத்தில் வெள்ள பிரச்சனை பொறுத்த வரைக்கும் நிர்மலா சீதாராமன் அணுகுமுறை ஏமாற்றம் அளித்துள்ளது. முதல்வர் டெல்லி சென்றது கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை மட்டும் அல்ல பிரதமரை காண்பதற்காகத்தான் தமிழகத்தில் தேவையான நிதி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மழை வெள்ள காலங்களில் அனைத்து துறை பணியாளர்களும் ஊழியர்களும் பணி செய்து இயல்பு நிலைக்கு வர வேண்டும் என பணி மேற்கொண்டனர்.

இதுவரை ஒரு ஒன்றிய அமைச்சரும் வரவில்லை. இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது அரசியல் பேச வேண்டிய நேரமில்லை. மக்களின் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டு வரத்துக்கான பணியை மேற்கொள்ள வேண்டும் அரசியல் கூடாது.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக இதயத்தில் மட்டும் இடம் கொடுத்தால் கூட்டணியில் தொடர்வீர்களா என்று கேள்விக்கு
யூகத்தில் கேட்கக் கூடாது முதலமைச்சர் எங்களுக்குரிய மரியாதை வைத்திருக்கிறார். யூகங்கள் தற்பொழுது கூடாது என தெரிவித்தார்.

Views: - 266

0

0