ஆர்வமுடன் வாக்களிக்க வந்தவர்கள் இயந்திரம் பழுதடைந்ததால் ஏமாற்றம் : வாக்களிக்க ஏதுவாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 10:48 am
Voting Machine Repair - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் பொதுமக்கள் வாக்களிக்க வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்கு பதிவு செய்ய சுமார் 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கு உண்டான வாக்குப்பதிவு தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 23வது வார்டில் உள்ள பொதுமக்கள் வாக்கு பதிவு செய்ய வைத்திருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்து சுமார் 50 நிமிடங்கள் கழித்து சரிசெய்யப்பட்டது.

இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாக்கு இயந்திரம் பழுதடைந்து 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் அந்த வார்டில் மட்டும் வாக்களிக்கும் நேரம் 50 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Views: - 443

0

0