மகுடம் சூடிய எடப்பாடியார்… மகிழ்ச்சி வெள்ளத்தில் அதிமுக தொண்டர்கள்… பட்டாசுகளை வெடித்து உற்சாகம்..!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 12:34 pm

கரூர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவித்ததற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை தமிழக முழுவதும் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கரூர் பேருந்து நிலையம் அருகில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் அதிமுக தொண்டர்கள், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவர் அம்மா, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க,” என கோசங்கள் எழுப்பி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?