ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை… 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 1:37 pm
Quick Share

திருவள்ளூர் : பொன்னேரி அருகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் பொன்னியம்மன் நகரில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான சரவணன். இவர் கோவிலுக்கு சென்றுவிட்ட நிலையில், இவரது மனைவி கோமளா வீட்டை பூட்டி கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இன்று காலை வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலி பறித்து சென்ற நிலையில், தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 102

0

0