மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

Author: kavin kumar
23 ஜனவரி 2022, 1:21 மணி
Quick Share

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம்,சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன்(55). இவர் இதே பகுதியில் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரினை இயக்கியபோது அது இயங்கவில்லை. உடனடியாக மின் மோட்டார் பழுதினை நீக்குவதற்காக எலக்ட்ரிஷன் கணேசனை அழைத்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது மின்மோட்டாருக்கு மின் சப்ளை வரவில்லை. உடனடியாக அருகிலிருந்த மின்கம்பத்தில் ஏறிய மின் இணைப்பு கொடுக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அதே மின்கம்பத்தில் கணேசன் சடலமாக தொங்கினார்.

இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து எலக்ட்ரீசியன் கணேசன் உடலை பத்திரமாக கீழே இறக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் இறந்து கிடந்த கணேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த கணேசன் உடலை மீட்டனர். பின்னர் சிறுகனூர் போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 6269

    0

    0