போதை பொருட்களின் உபயோகத்தை ஊக்கப்படுத்துகின்றனர்.. இந்தி நடிகர்களுக்கு எதிராக வழக்கு..!

Author: Rajesh
21 May 2022, 5:09 pm
Quick Share

நடிகர் அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன், ஷாருக் கான் ஆகியோர் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருந்தனர். இதற்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து இனிமேல் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார். தொடர்ந்து, பான் மசாலா நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் ரத்துசெய்வதாக அறிவித்தார். ஆனால் அஜய் தேவ்கன், விளம்பரங்களில் நடிப்பது எனது தனிப்பட்ட உரிமை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலம், முஜாப்பர்பூரைச் சேர்ந்த தமன்னா ஹஸ்மி என்ற சமூக ஆர்வலர், நடிகர் அமிதாப் பச்சன், ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் விளம்பரங்கள் மூலம் குட்கா, புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டை மக்களிடம் ஊக்கப்படுத்துகின்றனர். அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

Views: - 663

0

0