அசுர வேகம்… லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து… பர்கூர் மலைப்பாதையில் நிகழ்ந்த சம்பவம் ; ஷாக் சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 1:50 pm

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் ‌லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் கர்கேகண்டியில் இருந்து பவானி நோக்கி வந்த தனியார் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீது‌ம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சிப்பதிவில் பர்கூர் மலைப்பாதையில் லாரி ஒன்று பிரேக் டவுன் ஆகி இடது புறமாக நின்று கொண்டு இருந்துள்ளது, அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுநர் நின்று செல்லாமல் வேகத்தில் அதனை ஓவர்டேக் செய்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் தொடர்ந்து லாரி மீதும் மோதி நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் ஓட்டுநர் பாலாஜி மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சகாதேவன் (46), இருசக்கர வாகன ஓட்டுனர் தனபால் (55), ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும், பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பனர்.

https://player.vimeo.com/video/887904061?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!