எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்.. சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 10:54 am

திருவள்ளூர் ; அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனமான டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் முன்பாக உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமன், எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கியும், பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இதில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?