‘இவங்களே தள்ளுபடி செய்வாங்களாம்… மீண்டும் விண்ணப்பிக்க சொல்வாங்களாம்’ ; ஆர்பி உதயகுமார் விமர்சனம்.!!

Author: Babu Lakshmanan
27 September 2023, 4:40 pm
Quick Share

மதுரை ; மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அரசே தள்ளுபடி செய்துவிட்டு, திரும்பவும் விண்ணப்பிக்கலாம் என  திமுகவின் முரண்பாடான செயலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுகள் விநியோகிக்கப்பட்டதாக செய்திகள் சொல்லப்படுகிறது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்களில் ஏறத்தாழ 60 லட்சம் அரசின் சார்பிலே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் குடும்பங்களை இந்த அரசு இன்றைக்கு தகுதி இல்லை என்கிற காரணத்தினாலும், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வரவில்லை என்கிற காரணத்தினால் தள்ளுபடி செய்து இருப்பது இந்த குடும்பங்களுடைய வேதனையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது. 

மக்களை சமாதானப்படுத்துவதற்கு அரசு ஒரு கோடி குடும்பங்களுக்கு கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் ஒரு கோடி பேர்களுக்கு கொடுத்ததாகவும் தெரியவில்லை. அதிலே இன்னும் பல குளறுபடிகள் உள்ளது. முழுமையான புள்ளி விவரம் அரசிடமும் இல்லை. யாரிடமும் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும்  முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம்  மேல்முறையீடு செய்யலாம் என்று இதை நியாயப்படுத்த மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற இன்னொரு வாய்ப்பு என்று சொல்லப்பட்டு மக்களை சமாதானம் செய்கின்றார்.

இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு வகையிலே மக்களை ஏமாற்றுகிற ஒரு அறிக்கையாக தான் இது பார்க்கப்படும இருக்கிறது.

வருமான உச்சவரம்பு, சொத்து உச்சவரம்பு , மின் பயணீட்டு அளவு உச்சவரப்பு  இந்த உச்சவரம்பை நிர்ணயித்து முன்பாகவே ஒரு கோடி பேர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவிக்கின்றார். இதில் முரண்பாடு உள்ளது பயனாளிகள்  கண்டறியப்பட்டு அதற்கு பின் தான் பயனாளிகள் எண்ணிக்கை  அறிவிக்க முடியும் இதுதான் அடிப்படை.

தற்போது அரசு விண்ணபிக்கலாம் என்று சொல்லி வருகிறது. பொதுவாக, ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால், அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம். ஏற்கனவே அரசு தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது ஒரு முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிப்பு செய்கிறது.

அனைத்து மகளிர்களுக்கும், உரிமை தொகை வழங்க வேண்டும் என்று அந்த மக்களுடைய தேவைகளை, கோரிக்கைகளை சட்டமன்றத்திலே தெளிவாக உறுதியாக ஆதாரப்பூர்வமாக எடப்பாடியார் எடுத்து வைத்ததை, நீங்கள் கேட்காத காரணத்தினால், இன்றைக்கு ஒரு கோடி ரூ. 20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஒரு கோடி என்று அறிவித்து, அதில் பாதியை  தாண்டாமல் இருப்பதினால், பாழும் கிணற்றிலே தள்ளும் நடவடிக்கையாக தான் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமைந்திருக்கிறது.

எடப்பாடியார்  கொடுத்த அந்த வேண்டுகோளின்படி அனைத்து மகளிர்களுக்கும் உரிமைத் தொகையை வழங்க இந்த அரசு முன்வருமா அல்லது பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிற ஒரு நடவடிக்கையாக இந்த அரசு நடவடிக்கை தொடருமா? எனக் கூறியுள்ளார்.

Views: - 133

0

0