பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்… வல்லுநர் குழு சொன்னதே இதுதான் ; முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கம்!

Author: Babu Lakshmanan
8 May 2024, 1:48 pm

கொரோனா தடுப்பூசி குறித்து தற்போது வரும் தகவல்களால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் :- அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் 30 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் பந்தல் திறக்கப்பட்டுள்ளது தினமும் ஆயிரம் பேருக்கு விதவிதமான ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டு வருகின்றன

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிமுக நடத்தும் கோடை கால தண்ணீர் பந்தல் மட்டுமல்லாது, ஐஸ்கிரீம் பந்தலிலும் தினந்தோறும் அதிகளவு மக்கள் வந்து தங்களுடைய தாகத்தை போக்கிக் கொள்கின்றனர். தமிழகத்தில் வெப்ப அலை வீசுகின்றது என்று ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தேன். ஹீட் ஸ்டோக் பாதிப்பு உயிர் இழப்பை கூட ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து… ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே … சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடு..!!!

சென்னையில் அரசு கோடைகால வார்டு தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கது. அதே போன்று அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகளை திறக்க வேண்டும். எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.

இந்த தடுப்பூசிகள் 10 லட்சம் பேருக்கு ஒருவருக்கு அரிதாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளனர். இப்போது வரும் தகவல்களால் கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை. எனினும், வல்லுநர் குழுவினர் இன்னும் கூடுதலான ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் சந்தேகத்தை போக்க வேண்டும். அரசு பொதுமக்களுக்கு கோடை காலங்களில் எது செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், எனக் கூறினார்.
என்றார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!