பா.ஜ.க.வில் இணைந்த திமுக கூட்டணி எம்எல்ஏவின் முன்னாள் மனைவி… பிரபல நடிகரும் ஐக்கியம் : தமிழக அரசியலில் பரபரப்பு!!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 11:12 pm
DMK Vs Bjp - Updatenews360
Quick Share

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலராக இருந்தபண்ருட்டி வேல்முருகன், ஒருகாலத்தில் பாமகவின் ஆற்றல்மிக்க பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர்.

கடந்த 2011ஆம் ஆண்டு தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 9 பேருக்கு  பிடிவாரண்ட் | Warrant for 9 people including MLA Velmurugan in toll gate  atrocity case | Puthiyathalaimurai ...

பல்வேறு தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்ததுடன், பாமகவின் வன்னியர் மக்களின் வாக்குகளை தன்வசப்படுத்தினார். மேலும் கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி போட்டு உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவையில் நுழைந்தார்.

Velmurugan gets Panruti in DMK alliance - Thamizhaga Vazhurimai Katchi-  Velmurugan- DMK alliance- Tamilnadu- assembly election- Panruti  constituency | Thandoratimes.com |

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயத்ரி பாஜக

பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவரை மாநில தலைவர் அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கி பாஜகவுக்கு வரவேற்றார்.

இதே போல தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்னேஷ் பாஜக வில் இணைந்தார். இவர் 1992ல் வெளியான சின்னத்தாயி படம் மூலம் அறிமுகமானவர். கிழக்கு சீமையிலே, பசும்பொன், ராமன் அப்துல்லா உட்பட பல படங்களில் நடித்தவர். சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Image

கடந்த வாரம் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான மறைந்த க.அன்பழகனின் பேரனுமான அன்புகிரி பாஜகவில் இணைந்துள்ளது.

Views: - 941

1

1