10ம் வகுப்பு பொதுத்தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆங்கிலப் பாடத்தில் 5 மார்க் போனஸ் ; தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
24 April 2023, 12:00 pm
Quick Share

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 5 மார்க்குகளை போனஸாக வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 4,167 மையங்களில் நடந்த இந்தத் தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே.17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 243

0

0