விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : ஒருவர் பலி : 2 பேர் படுகாயம்…

Author: kavin kumar
29 January 2022, 10:13 pm
Quick Share

விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் அருகே அம்மன் கோவில் பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை வழக்கமான பட்டாசு தயாரிக்கும் பணிகள் பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.படுகாயமடைந்த இருவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 2329

    0

    0