திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் : நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்…

Author: kavin kumar
8 February 2022, 7:04 pm

திருவாரூர் : மன்னார்குடி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலையின் நடுவே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரத்தூர் கிராமத்தில் 750 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஒரத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஓரதூர் பகுதியில் 15 நாட்களாக சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஒரத்தூர் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் 2ஆயிரத்து 500 ககும் மேற்ப்பட்ட மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரிடம் மனு அளித்தும் இன்று வரை நெல் கொமுதல் நிலையம் திறக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒரத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே மன்னார்குடி முத்துப்பேட்டை சாலையில் நெல் முட்டைகளை சாலையின் குறுக்கே அடுக்கி வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் கலப்பால் காவல் ஆய்வாளர் சரசு ஆகியோர் விவசாயிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?