வெற்றி கொண்டாடத்தின் போது தீ விபத்து : திமுகவினர் வெடித்த பட்டாசால் சாம்பலான வீடு…

Author: kavin kumar
22 February 2022, 7:05 pm
Quick Share

திருவாரூர் : திருத்துறைப்பூண்டியில் திமுகவினர் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 11வது வார்டு வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த கூரை வீட்டின் மீது பட்டாசு வெடித்து விழுந்ததில் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனாடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.

Views: - 560

0

0