மது பாட்டிலில் மிதந்த ஈ… குப்பையுடன் மதுபானம் : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.. டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 6:41 pm
Dust in Alcohol - Updatenews360
Quick Share

வேடசந்தூரில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபானத்தில் ஈ இறந்து மிதந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நான்கு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. வேடசந்தூர் ஓட்டன் சத்திரம் சாலையில் உள்ள டாஸ்மாக் எண் 3222 உள்ள கடையில் அதே பகுதியில் ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர்,

ஒரு ஆரஞ்சு ஓட்கா மதுபான பாட்டிலை வாங்கி உள்ளார். அந்த பாட்டிலை வாங்கி பார்த்தபோது அதில் இருந்த மதுபானத்திற்குள் ஈ ஒன்று இறந்து கிடந்தது. மேலும் ஏராளமான தூசிகளும் மிதந்துள்ளன.

இதுகுறித்து அவர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டபோது,
கம்பெனியில் இருந்தே வந்ததிருக்கும். எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமானால் பாட்டிலை மாற்றிக் கொள்கிறோம் என்று அந்த பாட்டிலை வாங்கி வைத்துவிட்டு வேறு ஒரு மதுபான பாட்டிலை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

மதுபான பாட்டிலுக்குள் ஈ மற்றும் தூசி கிடந்த காட்சியை அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம் எடுத்தனர். டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டில் ஈ இறந்த கிடந்ததால் கடைக்கு வந்த மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Views: - 193

0

0