காலியானது ஓபிஎஸ் கூடாரம் : ஓபிஎஸ் கிட்ட நேர்மையில்ல… சுயநலவாதி… ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 7:16 pm
Kovai Selvaraj - Updatenews360
Quick Share

ஒற்றைத் தலைமையால் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதில், ஓ.பி.எஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் தற்போது அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயலாபத்திற்காக சண்டையிட்டு வருகின்றனர். அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை.

அம்மாவுக்காக இந்த கட்சியில் பணியாற்றினேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், அம்மாவின் உயிரை காப்பாற்ற வெளிநாடுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. அப்பல்லோவில் முறையான சிகிச்சை அளிக்க குரல் கொடுக்கவில்லை.

அதனால் இந்த சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Views: - 409

0

1