விற்பனைக்கு வந்த அரிய வகை பறவைகள் பறிமுதல்… அதிகாரிகள் வார்னிங்…!

Author: kavin kumar
13 February 2022, 3:54 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் வேட்டையாடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் அரியவகை பறவைகள் உட்பட கொக்கு , கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கூடப்பாக்கம், ஓதியம்பட்டு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது கூடப்பாக்கம் பகுதிகளில் கொக்கு உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது வனத்துறை அதிகாரிகளை பார்த்ததும் விற்பனை செய்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 க்கும் மேற்பட்ட நத்தைகுத்தி நாரை, ஆள்காட்டி குருவி, உன்னி கொக்கு, அரிவாள் மூக்கன் , கொக்குகள் ,மைனா, பச்சை கிளிகளை அதிகாரிகள் கைப்பற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்பவர்கள மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?