தாலி கட்டாதீங்க.. திருமணத்திற்கு பிறகு அனுமதிக்கணும்.. ரூ.20 பத்திரத்தில் மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 3:52 pm

உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பின்னும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து வைத்த சுவாரஸ்யம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள இவர் கிரிக்கெட் விளையாட்டிலும் கெட்டிக்காரர் என கூறப்படுகிறது.

இவர்களது கிரிக்கெட் அணியான சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ஹரிபிரசாத்-க்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை திருமணத்திற்கு பின்னரும் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று சம்மதபத்தரத்தில் கையெழுத்திட வைத்து திருமண விழாவை அதிர வைத்தனர்.

திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • gautham menon and yashika aannand spotted in beach in dd next level trailer பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!